மாணவர்கள் கவனத்திற்கு..! இந்த செயலி உங்களுக்காக தான்..!

Default Image

அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நோக்கம் என்ற செயலி அறிமுகம். 

தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் காணொலிப்பாதை (YouTube channel) ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

நோக்கம் செயலி 

இந்த காணொலிப்பாதையின் நீட்சியாக இக்கல்லூரி
போட்டித் தேர்வுகளுக்கென்றே ‘செயலி’ ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘நோக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலியின் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சிக் காணொலிகளைக் காண்பதோடு அதற்கான பாடக் குறிப்புகளையும் (notes) இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் சிறப்பம்சமே மாதிரித் தேர்வுகள்தாம். ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தயாரிப்பின் நிலையை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும். ‘நோக்கம்’ செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்