மாணவர்கள் கவனத்திற்கு..! கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து, பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த 2 வருட காலமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் மீண்டும் குறைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து, பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும், பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.