மாணவர்கள் கவனத்திற்கு! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மேலும் அவகாசம் நீட்டிப்பு!

Engineering Counselling

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு செய்து உயர்கவித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது.

இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன. எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in இணையதளத்தில் “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest