பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.
பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளையுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1,76,155 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனிடையே, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு கடந்த 20-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…