மாணவர்கள் கவனத்திற்கு.. ஆசிரியர்களுக்கு தொந்தரவு தந்தால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை

Default Image

ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC, Conduct Certificate-ல் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது. ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களின் சான்றிதழ்களில் ஒழுங்கீனமானவர் எனக் குறிப்பிடப்படும் என கூறிய அவர், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் செல்போன் எடுத்து வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வரும் கல்வி ஆண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை நடத்திவிட்ட பின்னரே பாடங்கள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்