மாணவர்கள் கவனத்திற்கு…! +2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு…!
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மே 30-ஆம் தேதி முதல் மறுகூட்டலுக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்து இருந்தது.
அதன்படி விருப்பமான மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இன்று மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வுகள் தேர்வுகள் அது பதிவெண் பட்டியல் மட்டும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வெளியாகும் என்றும், இந்த பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களில் விடைத்தாளில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.