மக்களே கவனம்… 2 நாட்களுக்கு கொளுத்த போகும் வெயில்..அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு வெயில்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
8 இடங்களில் சதமடித்த வெயில்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 இடங்களில் வெயிலின் அளவு 100 ஐ தாண்டியுள்ளது. அதன்படி, கரூர் பரமத்தியில் 102.2,சேலத்தில் 101.84 , நாமக்கலில் 100.4 , மதுரை விமான நிலையத்தில் 100.04 ,திருப்பத்தில்ர் 100.04 ,மதுரை நகரில் 100.04 ,ஈரோட்டில் 101.48 , வேலூரில் 100.76 என பதிவாகியுள்ளது.
மக்கள் வெளியே செல்லவேண்டாம்
கோடைகாலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.