கோவை மக்கள் கவனத்திற்கு..! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!

kovaicollector

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும், வளிமண்டல சுழற்சியானது தமிழக பகுதியில் இருந்து கேரளாவை நோக்கி செல்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கனமழை தொடரும்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

இந்த நிலையில், கோவை ஆட்சியர் கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள். மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்