சென்னை மக்கள் கவனத்திற்கு…! நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக அறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் எங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து வழங்கப்படும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளி திறக்கும் போது பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீரை அகற்றிய பின் நடமாடும் வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்