சென்னையில் நடைபெற உள்ள மாரத்தானை முன்னிட்டு நாளை(ஜனவரி 6) அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், வருகின்ற 06.01.2024 அன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.
வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரன்னா்ஸ் அமைப்பு சாா்பில் 4 பிரிவுகளாக ஜனவரி 6-ஆம் தேதி (நாளை) அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. மெரீனா நேப்பியா் பாலம், பெசன்ட் நகா் ஆல்காட் நினைவுப் பள்ளி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கும் மாரத்தான் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் வரை செல்கிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…