வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம்…!
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வரும் 28ஆம் தேதி தலைக்கவசம் நிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, இரண்டாவது முறை ரூ.1500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.