மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு! கவுண்டரில் டிக்கெட் பெற அறிவுறுத்தல்!

மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கவுண்டர்களில் டிக்கெட் வாங்கிக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Metro

சென்னை : மெட்ரோ ரயில்பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால்,  ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய கவுண்ட்டர்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்.

இன்று காலை பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில்  செய்தபோது செய்யமுடியாமல் இருந்ததால் பயணிகள் சிரமத்தில் இருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் எதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர்.

உடனடியாக இதனை கவனித்த மெட்ரோ நிர்வாகம் இதற்கான காரணத்தை விளக்கி விரைவில் இது சரி செய்யப்படும் என தங்களுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் ” ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தற்காலிக சிக்கல்களால், பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. CMRL ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது” என கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்