ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் கவனத்திற்கு..! 3 நாட்கள் மட்டுமே அவகாசம்…!
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி madurai.nic.in என்ற இணையதளத்தில் இன்று பகல் 12 மணி முதல் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.