குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு! – TNPSC முக்கிய அறிவிப்பு!
குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
குரூப் 4 தேர்வில் 18 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், கடந்த மார்ச் 24ஆம் தேதி இதற்கான முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து, குரூப் 4-ல் முதலில் 7,301 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை ஏற்று குரூப் 4 பணியிடங்களை 10,178-ஆக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
எனவே, குரூப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.