பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு….! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!
கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் பேறுகால விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி, சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.