விவசாயிகள் கவனத்திற்கு..! இன்று தான் கடைசி நாள்…!
தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது.