இன்ஜினீயரிங் மாணவர்கள் கவனத்திற்கு…! இன்றே கடைசி நாள்…!
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இடம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 14,524 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றதுடன், விரும்பிய இடங்கள் கிடைத்தால் ஒதுக்குமாறு, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
பொறியியல் படிப்பில் முதல் சுற்று கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாளாகும். அதன்படி, அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை அளித்து, கல்வி கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.