திமுகவினர் கவனத்திற்கு.! பேச்சில் நிதானம் தேவை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

Default Image

சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம், கவனத்துடன் கையாளுங்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்.

சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா மனுநீதி குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. இதை எதிர்த்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து, சில இடங்களில் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா தொடா்ந்து பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. இதன்பின், உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, `பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள்’ என்ற பேச்சு மேலும் சர்ச்சையாக மாறியது.

இதற்கு பதில் கூறிய அமைச்சர், பெண்களின் இலவசப் பயணம் குறித்து நான் விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் எந்தத் தவறான எண்ணத்திலும் பேசவில்லை என்றார். இதுபோன்று, தொடர்ந்து திமுகாவினர் சர்ச்சை பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் குற்றசாட்டி வரும் நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம், சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தவர்களை கண்டிக்காமல் அமைதியாக இருக்கிறார் என பல்வேறு புகார்கள் எழ தொடங்கின.

இந்த நிலையில், தலைவர் பதவிக்கு அக்டோபர் 7-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், திமுகவினருக்கு எச்சரிக்கையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அதாவது, அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்.26-ம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக் கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம்.

இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன். மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அதற்குத் தடங்கலாகும் சூழலைத் திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள்.  நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி – ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். அவர்களின் கற்பனையிலும் கனவிலும்தான் புழுதிமண் விழும்; விழ வேண்டும். அதற்கேற்ப உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்