புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியினை புகுத்த நினைப்பதாகவும் இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியில் தான் கடிதங்கள் கூட அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழும்புகிறது. தொடர்ந்து மத்திய அரசு மக்களிடம் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது எனக் கூறியுள்ளார்.
மக்களின் நிலையை புரிந்து கொள்ளாத மத்திய அரசால் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் கூட குறுந்தகவல்கள் இந்தியில் வருவதினை பார்க்க முடிகிறது. மனிதாபிமானம் கூட இல்லாமல் இந்தியை புகுத்துவதை தொடர்ந்து செய்வது மோசமான விளைவுகளை உருவாக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் நடந்த பாலியல் சம்பவம் கூட அரசாங்கத்தால் மூடி மறைக்கத்தான் படுகிறதே தவிர குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…
சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…