முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது என காவல்துறை நீதிமன்றத்தில் தகவல்
கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக விருதுநகர் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் கூறியதாகவும், அதனால் பலரிடம் பணம் வாங்கி ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும் விஜயநல்லதம்பி கூறினார். நான் கொடுத்த 3 கோடியை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை என விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இந்த புகார் அடைப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.
பின்னர், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் கைது செய்துவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த காவல்துறை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது மட்டுமல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளதாக பதில் அளித்தது.
பின்னர், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்றும் ஜாமீன் மனு மீதான விசாரணை 24-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…