இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவனை மீண்டும் தமிழகம் அனுப்ப முயற்சி..!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவனை மீண்டும் தமிழகம் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்.
நேற்று முன்தினம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு இழுவை படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த 15 மீனவர்களும் 14 வயது சிறுவனும் உள்ள நிலையில், அந்த அசிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுவனை இந்திய அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்வதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தகவல் அளித்துள்ளது.