#BREAKING: என்னை கொல்ல முயற்சி -கடம்பூர் ராஜு பரபரப்பு புகார்..!
தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து கோவில்பட்டி தொகுதி நட்சத்திர தொகுதியாக உள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்கள் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக சார்பில் டி.டி.வி தினகரனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன் போட்டியிடுகின்றனர். இதனால், தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அமமுகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அமைச்சர் கடம்பூர் ராஜு அந்த வழியாக வந்தபோது அமமுகவினர் திடீரென அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகில் வைத்து பட்டாசு வெடித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு அமமுகவினர் எனது காரை வழிமறித்ததாகவும், தடுத்து நிறுத்தி என் கார் மீது அமமுகவினர் வெடிகளை எறிந்துள்ளனர். என் தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர் என தெரிவித்தார்.