நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.! இபிஎஸ் கடும் கண்டனம்.!
நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் குளித்து கொண்டிருந்த சமயம், அங்கு வந்த ஒரு கும்பல், இந்த இரு இளைஞர்களிடமும் அவர்கள் சாதி பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது இந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்த்தவர்கள் என்றவுடன், அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணம் , செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அந்த இளைஞர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திமுகவினர் பச்சோந்தியை கூட தோற்கடித்து விடுவார்கள் – ஜெயக்குமார்
இந்த வழக்கின் கீழ் விசாரணை மேற்கொண்ட போலீசார், நெல்லை தாழையூத்து கிராமத்தை சேர்ந்த பொன்னுமனி, நல்லமுத்து, ராமர், சிவா, லட்சுமணன் ஆகிய 5 பேரும் தான் பட்டியலின இளைஞர்களை சித்தரவதை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் சாதிய ரீதியில் இளைஞர்கள் மீது நடந்த இந்த கொடூர தாக்குதல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது,
இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.