செய்தியாளர் மீது தாக்குதல்! கண்டனம் தெரிவித்து நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நேசபிரபு என்பவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு நேசபிரபுவை அடையாள தெரியாத மர்மநபர்கள் தாக்கியதில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டது தொடர்பாக 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 2 பேரை காவல்துறை கைது செய்தனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக பிரவீன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி தெரிவித்தார்.
இந்த நிலையில், செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டங்கள் எழுந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அதற்கு கண்டனம் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிக்கையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு, நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
சார் லைஃப் முடிஞ்சது.! பதைபதைக்க வைத்த ஆடியோ.! போலீசாரிடம் கெஞ்சிய பத்திரிக்கையாளர்.?
ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு, காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபு அவர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். இதனிடையே, நேற்றிரவு நேசபிரபு மர்மநபர்கள் பின்தொடர்ந்து வருவதும், தாக்குதல் சம்பவம் குறித்தும் அவசர எண் மூலம் காவல்துறைக்கு தகவல் கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.