தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.. முதல்வர் ட்வீட்டிற்கு அண்ணாமலை கருத்து!

Published by
பாலா கலியமூர்த்தி

சித்தாந்த வேறுபாடுகள் உள்ள சூழலில் வாழ கற்றுக்கொள்ளுங்கள், நெருப்பை எரியவிடாதீர்கள் என முதலமைச்சரின் ட்வீட்டிற்கு அண்ணாமலை கருத்து.

தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்:

jnudelhi

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் சத்ரபதி சிவாஜி பிறந்தாநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ஏபிவிபி பிரிவு மாணவர்கள் மற்றும் இடதுசாரி மாணவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அங்கு மாணவர்களிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், இடதுசாரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

சத்ரபதி சிவாஜியின் புகைப்படம் தரையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஏபிவிபி அமைப்பினர் தமிழ்நாட்டு மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தமிழக மாணவர்கள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது பதிவில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்றும், ஏபிவிபி மாணவர்கள் பெரியார், கார்ல்மாக்ஸ் புகைப்படங்களை சேதப்படுத்தியது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்திருந்தார். இதுபோன்று, டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். தந்தை பெரியார், அம்பேத்கர் உருவப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பினரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏபிவிபி மற்றும் எஸ்எப்ஐ மோதல் குறித்து விளக்கம்:

இந்த நிலையில், டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் நடந்த ஏபிவிபி மற்றும் எஸ்எப்ஐ மோதல் குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு முழு தகவலையும் அறியாமல் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அளித்த தகவலைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த மெத்தனப் போக்கை, நம் மாநில மக்கள் பொறுத்துக் கொள்வதும் வருந்தத்தக்கது. நேற்று, டெல்லி ஜேஎன்யூவில் உள்ள மாணவர் செயல்பாடு மையத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜை மாலை 6:30 மணிக்கு கௌரவிக்கும் நிகழ்ச்சியை ஏபிவிபி நடத்த திட்டமிட்டது.

உருவப்படங்கள் சேதம்:

இருப்பினும், SFI இன் நிகழ்வு திட்டமிடப்பட்ட முன்பதிவை விட இழுத்தடிக்கப்பட்டதால் ABVP இன் நிகழ்வு இரவு 7:30 மணிக்கு மட்டுமே தொடங்கியது. ஏபிவிபியின் மாணவர்கள் இரவு 8:30 மணிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு இரவு உணவிற்கு வெளியே சென்றிருந்தபோது, எஸ்எஃப்ஐயைச் சேர்ந்த மாணவர்கள் செயல்பாட்டு மையத்திற்குள் நுழைந்து, ஜேஎன்யு அதிகாரிகளின் முன் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மகா ராணா பிரதாப் ஆகியோரின் உருவப்படங்களைச் சேதப்படுத்தினர்.

இருதரப்பு மாணவர்களும் காயம்:

ABVP மாணவர்கள் SFI மாணவர்களின் நடத்தைக்காக அவர்களை எதிர்கொண்டபோது, அந்த நடவடிக்கை மையத்தில் கார்ல் மார்க்ஸ் & லெனின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பு மாணவர்கள் காயமடைந்தனர் என்று இதுதான் கதையின் மறுபக்கம் என பதிவிட்டுள்ளார்.

வாய் திறக்காத முதலமைச்சர்:

மேலும், முதல்வர் முக ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ள அண்ணாமலை, ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக இருதரப்பு மாணவர்களுக்கும் ஒருவர் அறிவுரை கூற வேண்டும், சித்தாந்த வேறுபாடுகள் உள்ள சூழலில் வாழ கற்றுக்கொள்ளுங்கள், நெருப்பை எரியவிடாதீர்கள் என முதலமைச்சரின் ட்வீட்டிற்கு அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

8 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

9 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

10 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

10 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

11 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

11 hours ago