மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த ஆட்சியைப் பிடித்த பிறகு,மத்திய அமைச்சரவை முதல் முறையாக நேற்று விவாக்கம் செய்யப்பட்டு,புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றனர்.
இதனையடுத்து,தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவானது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அந்த வகையில்,மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றார்.அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு மீன்வளத்துறை,கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை,தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:”மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோ அளவில் குறைந்துள்ளது.இதனால்,மீனவர்களுடைய மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே,மீனவர்கள் நலனுக்காகாக மத்திய அரசு செயல்படும்.மேலும்,கச்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்.
ஆனால்,கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக அரசுதான்,இது குறித்து மற்றொரு நாள் விரிவாக பேசுவோம்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,தமிழக மீனவர்கள்,இந்திய மீனவர்கள் என்று அழைக்கப்படுவார்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,”தமிழக மீனவர்கள் என்று மற்றவர்கள்தான் அழைக்கிறார்கள்,ஆனால்,நாங்கள் இந்திய மீனவர்கள் என்றே அழைக்கிறோம்”,என்று கூறினார்.
இதனையடுத்து,தமிழகத்தின் பாஜக தலைவர் பொறுப்பிலும் நீங்கள் தொடர்ந்து இருப்பீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு,”புதிய பாஜக தலைவரை நியமிப்பதில் கட்சி தலைமை முடிவு செய்யும்”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…