மருத்துவர் மீதான தாக்குதல்: இன்று (நவ. 14) யார் வேலைநிறுத்தம்? யார் வாபஸ்?
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தாயாருக்கு முறையாக சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தன. அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அதாவது, சென்னையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், தாக்குலை கண்டித்து தமிழகத்தில் நாளை (நவ.14) 45,000 மருத்துவர்கள் நாளை மாலை 6 மணி வரை வேலை நிறுத்தம் என அகில இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்திருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர்.