சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், 13 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் தந்தி காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் நாகர்கோவிலுக்கு சென்ற பின், அவரது வீட்டிற்கு 15 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளனர்.
இந்த கும்பல் வீட்டின் மீது சராசரியாக கற்களை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. மேலும் சில பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நேற்று இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் தூண்டுதலின் பேரினால் தான்இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று திமுக கவுன்ஸிலர் மூன்று பேர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…