விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில், நேரு தெரிவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வந்த வங்கி ஊழியர்கள் ஏடிஎம் எந்திரத்தின் சாவியை அந்த எந்திரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
நேற்று காலை 10 மணிக்கு வந்த நபர் ஒருவர், அந்த சாவியை கண்டவுடன் அதனை திருடி எடுத்து சென்றுவிட்டு, இரவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்-ஐ கொள்ளையடித்துவிடலாம் என எண்ணி இரவில் சாவி போட்டு ஏடிஎம்-ஐ திருட முயற்சித்துள்ளான். அந்த நேரம் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டதால், பதறி அங்கிருந்து ஓடிவிட்டான். ஆனால் இவை அத்தனையும் ஏடிஎம் எந்திரத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்து வைத்துள்ளது.
பின்னர் திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனின் வங்கி ஊழியர்கள் இந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்து புகாரளித்தனர். இதனை தொடர்ந்து, சிசிடிவி காமிரா மூலம் ஆராய்ந்து, அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். அந்த திருடன் பெயர் சுகுனந்தன். இவர் திண்டிவனத்தை சேர்ந்தவர்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…