ஏடிஎம் கொள்ளை – 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்.
ஏடிஎம் கொள்ளை:
கடந்த வாரம் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஎம் கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் தப்பி சென்று அங்கிருந்து ஹரியானா சென்றது தெரியவந்தது. ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இருவர் கைது:
கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த சமயத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக நேற்று மேலும் இருவரை கைது செய்தது காவல்துறை. கர்நாடகா கோலாரியில் பதுங்கி இருந்த குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் காவல் விதிப்பு:
இந்த நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை, குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார்.