சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ATM..! 200க்கு பதில் 500 ரூபாய் நோட்டுகள்…!
சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. வாடிக்கையாளர்களில் ஒருவர் அவருக்கு ரூ.8000 வேண்டுமென்று ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளிட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு இயந்திரத்திலிருந்து 20,000 ரூபாய் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த கோளாறு குறித்து புகாரளித்ததையடுத்து வங்கி நிர்வாகம், ஏடிஎம்-ஐ மூடியது.
பின்பு தொழிநுட்ப குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இயந்திர கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வங்கி நிர்வாகம் கூறுகையில், 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்ததால் இந்த தவறு நிகழ்ந்ததாக விளக்கம் அளித்துள்ளது.