அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! தினமும் 3 லாரிகள் அளவிற்கு குப்பைக்கு செல்லும் காலணிகள்!

Default Image

காஞ்சிபுரம் அத்திவரதரை காண நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம், பக்தர்களை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்பி, மேற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பும்படி பாதை வடிவமைத்து உள்ளனர்.

பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்கையில் காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு சென்று விடுகின்றனர். கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையே சுமார் ஒன்றரை கிமீ இருப்பதாலும், வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்த களைப்பினாலும் பக்தர்கள் தங்கள் காலணிகளை திரும்ப எடுப்பதில்லை.

இதனால் மட்டும் ஒரு நாளைக்கு 3 லாரிகள் அளவிற்கு காலணிகள் சேர்ந்து விடுகிறதாம். இதனை லாரிகள் மூலம் நத்தம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி விடுகின்றனராம். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், மழைநீர் விழுந்தால் காலனிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உண்டாகும் எனவும் அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gold Price in tamilnadu
allahabad high court
nitish kumar national anthem
Encounter - TnPolice