“வறட்சிக்கு முடிவுகட்டும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் ” : தொடங்கி வைத்தார் முதல்வர்.!

Published by
பால முருகன்

சென்னை : விவசாயிகளின் பல ஆண்டுகால கனவாக இருந்த ‘அத்திக்கடவு- அவினாசி’  திட்டத்தை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

கோவை, ஈரோடு, திருப்பூர்,  மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468  ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தினை சென்னையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதால் கொங்கு விவசாயிகளின் கனவு நனைவாகி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளார் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்றால் என்ன?

அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்றால் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும்  பவானி ஆற்றின், பில்லூரிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வறட்சி பாதித்த பகுதிகளை பசுமையாக்கும் திட்டமாகும். இந்த திட்டம் கொங்கு மக்களின் பல  ஆண்டுகால கனவு திட்டம்  என்று கூறலாம்.

இந்த திட்டத்தின் மூலம் என்ன பயன்?

இன்று இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவை என 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் இருக்கும் 31 ஏரிகள் மற்றும் ஆயிரத்து 45 குளங்கல் ஆகியவற்றில் தண்ணீர் தேக்கிவைக்கப்படும்.  இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய பயன்பாட்டுக்கான கிணறுகள், ஆழ்த்துளைக்கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். அதைப்போல, குடி நீர் பிரச்சனைக்கும் அத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று  விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர்த்தப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 minutes ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

46 minutes ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

2 hours ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

2 hours ago

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

3 hours ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

3 hours ago