அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிலை சீரழிந்து விட்டது. ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு முறையாக வழங்கியதா..? என மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் எழிலரசன், உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, உங்கள் வரவேற்பையும், உற்சாகத்தையும் பார்க்கும்போது நமது வெற்றி நன்றாக தெரிகிறது.
ஜெயலிதா மறைந்து சசிகலா சிறைக்கு சென்றதால் தான் பழனிச்சாமி முதல்வரானார். வர்தா புயலின் போது தமிழகம் கேட்டது 22,000 கோடி, ஆனால் மத்திய அரசு கொடுத்தது 22 கோடி என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களுக்கென தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். சாகும் நேரத்தில் சங்கரா…சங்கரா… என்பது போல ஆட்சி முடியும் தருவாயில் திட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிலை சீரழிந்து விட்டது. ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு முறையாக வழங்கியதா..? என கேள்வி எழுப்பினார். கொரோனா பேரிடர் நிதியைக்கூட முழுமையாக வழங்கவில்லை மத்திய பாஜக அரசு என தெரிவித்தார்.
அதிமுக-பாஜக கொள்ளைக் கூட்டத்தை கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும். தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் இழைக்கிறது பாஜக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் நவீன மயமாக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லைசத்யா,செய்யூர் தொகுதி வேட்பாளர் பனையூர்பாபுவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…