தமிழில் 100க்கு 138 எடுத்த +2 மாணவி.? குழப்பத்தில் பள்ளிக்கல்வித்துறை.!
12 வகுப்பு தேர்வு முடிவில் ஒரு மாணவிக்கு தவறுதலாக 100க்கு 136 என பதியப்பட்டு முடிவு வெளியாகியுள்ளது.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இதில் 600க்கு 600 எல்லா பாடத்திலும் முழு மதிப்பெண் என மாணவி அசத்தி இருந்தார். ஆனால் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் 100க்கு 136 மதிப்பெண் எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார் என்றே கூற வேண்டும். அது அந்த மாணவிக்கே அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் என்று தான் கூற வேண்டும்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த சூரக்குளம் பகுதியைச் சேர்ந்த +2 மாணவிக்கு தமிழ் படத்தில் தவறுதலாக 100க்கு 138 மதிப்பெண்கள் எனவும் மற்ற சில பாடங்களில் 70க்கு மேல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் தேர்ச்சி பெறவில்லை என முடிவு வந்தது. இந்த ரிசல்ட் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தது. அதில், தேர்வுக்கு மாணவி விண்ணப்பித்த போது பழைய பாடத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருந்தது எனவும் , பழைய பாடத்திட்டம் படி 200 மதிப்பெண்ணிற்கு ரிசல்ட் வந்துள்ளது எனவும் விரைவில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு அவருக்கு தேர்ச்சி பெறாத மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.