#Breaking:பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி விளக்கம்..!
- 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை அடிப்படையிலேயே,பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.
இதனால்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையானது,11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை அடிப்படையிலேயே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் க.பொன்முடி,செய்தியாளர்களிடம் கூறுகையில்:
தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
மேலும்,பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையை எதன் அடிப்படியில் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்”,என்று கூறினார்.