அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் அதிமுக – தேமுதிக இடையே சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், திடீரென தேமுதிக சுதீஷ் பொதுக்குழு கூட்டத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது அதிமுக கூட்டணியில் குறைந்தது 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தியாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று தேமுதிக நிர்வாகிகள் எதிர்பார்த்து கொண்டியிருக்கின்றனர். இதனிடையே, கடந்த பேச்சுவார்த்தையின்போது போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதன்படி, விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதுநகர், விருத்தாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மேட்டூர், மயிலாடுதுறை, பண்ருட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளும் தேமுதிக விருப்ப பட்டியலில் உள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கபடும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…