அஸ்வினியின் உடல் போரூர் மின் மயானத்தில் தகனம்!
போரூர் மின் மயானத்தில் சென்னை கே.கே.நகரில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அஸ்வினி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள், உடலை வாங்கிச் சென்றனர். வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அஸ்வினி உடலுக்கு அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலை 4 மணிக்கு அஸ்வினியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, அஸ்வினி கொலைக்குப் பின்னர் பொதுமக்களால் தாக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகேசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
அவனை கொலை நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் கொலை நடந்த விதம் குறித்து நடித்துக் காட்டச் செய்து வாக்குமூலம் பெற்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அழகேசனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் மோகனா உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.