15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி அருகில் மாணவி அஸ்வினியைக் கொலை செய்த அழகேசனை உத்தரவிட்டது.
கே.கே.நகரில் இருக்கும் தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை, அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் நேற்று கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த அஸ்வினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. மாணவி அஸ்வினியைக் கத்தியால் குத்திய அழகேசன் என்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் சிலர் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…