விண்வெளியில் இருந்து இமயமலை புகைப்படங்களை வெளியிட்ட விண்வெளி வீரர்!

Himalayas from space

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் இருந்து இமயமலையின் அசத்தலான படங்களை பகிர்ந்துள்ளார். அந்த விண்வெளி வீரர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) ஆறு மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த வீரர் தனது X தள பக்கத்தில் அழகான இரண்டு இமயமலை புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “விண்வெளியில் இருந்து இமயமலை… எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம், பூமியில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த புள்ளி, இந்த மலைகள் நமது கிரகத்தின் வளமான இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த இரண்டு புகைப்படங்களில், மேகங்கள் மீது மலைகள் இருப்பது தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்