மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

Default Image
மேஷ ராசிக்காரர்களே !
இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதிகளுக்குள் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்குப் பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக  மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியைத் தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்க்கை  அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review