செவ்வாய் தோஷ பயமே வேண்டாம்!

Default Image

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு.
(ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.)
எனவேதான் சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னக் காரர்களுக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
இனி 12 ராசிகளுக்கும் சுருக்கமாக ஒரு வரியில் ஏன் செவ்வாய் தோஷம் பாதிப்பதில்லை எனப் பார்ப்போமா?
லக்னம்/ராசி
மேஷம்: விருச்சிகம்:- இது செவ்வாயின் ஆட்சி( சொந்த வீடு). தன் வீட்டுக்கே யாராவது கெடுதல் செய்வார்களா? எனவே தோஷம் இல்லை.
ரிஷபம்- துலாம்: சுக்கிரனின் சொந்த வீடு. இருவருக்கும் ரகசிய நட்பு இருக்கிறது அல்லவா. எனவே செவ்வாய் தோஷம் இல்லை,
கடகம்- சிம்மம் : நவக்கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே சூரியனோடு சேர்ந்த செவ்வாய் ஒருபோதும் தோஷத்தைத் தருவதில்லை.
மேலும் சந்திரன் தாய் எனும் அந்தஸ்தை உடையதாலும் 12 ராசிகளிலும், ராகு கேது தவிர்த்து மற்ற கிரகங்களை தொடர்பு கொண்டு இருப்பதாலும் தோஷம் இல்லை. மேலும் சந்திரன், செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கல யோகத்தைத் தருமே தவிர, தோஷத்தை தருவதில்லை.
தனுசு- மீனம்: குருபகவானின் சொந்தவீடு. இவர் தேவகுரு, எனவே குருவோடு சேர்ந்த அல்லது குரு பார்வை பெற்ற செவ்வாய், குரு மங்கல யோகத்தைத்தான் தருவாரே தவிர, தோஷத்தை எப்போதும் தரமாட்டார்,
மகரம்: சனிபகவானின் ஆட்சி வீடு. எனவே இந்த வீட்டில்தான் செவ்வாய் பகவான் உச்சம் அடைகிறார். ஆகவே இங்கு அமர்ந்த செவ்வாய், தோஷத்தை தருவதில்லை,
கும்பம்: இதுவும் சனி பகவானின் ஆட்சி வீடு. நாம் ஏற்கெனவே விளக்கியபடி சனிபகவான் தொடர்பு பெற்ற செவ்வாய் பகவான் தோஷத்தைத் தரமாட்டார்.
நான் ஏன் மிதுனம் , கன்னி ராசியை கடைசியாக எடுத்துக்கொண்டேன் என்றால் இந்த இரண்டு லக்ன மற்றும் ராசிகளுக்கு மட்டுமே செவ்வாய் தோஷத்தின் வீரிய அளவு பார்க்கபட வேண்டும்,
இந்த ராசிகளுக்கு செவ்வாய் கடுமையான எதிரி.
எனவே இதற்கு மட்டுமே விதிவிலக்கு என்ன( நாம் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டபடி) என்பதை ஆராய்ந்தால் போதும், 90 சதவிகிதம் செவ்வாய் தோஷ விலக்கு ஏற்படும்.
எனவே, செவ்வாய் தோஷத்திற்கு இதுவரை தந்த விளக்கங்கள் உங்களுக்குப் பயன் உள்ளதாகவும் இருக்கும்; பயம் போக்குவதாகவும் இருக்கும் என நம்புகிறேன்,
எனவே, தோஷத்தைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை. ஜாதக ரீதியான பொருத்தங்களை ஆராய்ந்து மணவாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன். மங்கலகரமான வாழ்வு நிச்சயம். மங்காத செல்வமும் பிள்ளைச் செல்வமும் கிடைத்து நல்ல அன்பான வாழ்க்கைத் துணையும் அமைந்து சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்!
எம்பெருமான் முருகன் துணை இருப்பான்……
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்