சிம்ம ராசிக்காரர்களே!
இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
குடும்பத்திலிருப்பவர்கள் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேச வேண்டும்.கலைத்துறையினருக்குப் பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்குப் புத்தித் தெளிவு ஏற்படும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.
source: dinasuvadu.com
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…