நீலகிரி மாவட்டம் உதகை மண்டலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி முப்ஸிபா துனிசா. இவர் நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் அந்த புதிய நுண்ணுயிரிக்கு தமிழிலான்ஸிஸ் என்று தமிழிலேயே பெயர் சூட்டியுள்ளார். இந்த நுண்ணுயிரி செழிப்பான புல்வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்கச் செய்து, மண்ணை தரம்வாய்ந்த உரமாக மாற்றும் ஆற்றல் கொண்டதாக செயல்படுகிறது.
அரசு கலை கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகத்தில் 5 வகையான புதிய நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துனிசா, 2018ம் ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது அரசு கல்லூரி அருகே மண்ணுக்கு அடியில் 1 மில்லி மீட்டருக்கும் குறைவாக நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக்கூடிய ஒரு மண் பூச்சியை கண்டுபிடித்தார்.
அதனை, தொடர்ந்து இவர் ஆராய்ச்சி செய்த போது, அந்த பூச்சி பயோ நிகோரஸ் என்ற பேர் இனத்தை சேர்ந்த பயோனிசிரஸ் என்ற புதிய வகை பூச்சி என்பது தெரியவந்தது. இதே குடும்பத்தை சேர்ந்த 6 வகையான பூச்சிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது 7வது வகை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சியின் டி.என்.ஏ. மாதிரிகள் ஸ்பெயின் நாட்டில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்கத்தாவில் இருக்கும் சுவலாஜிக்கல் சர்வே ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பின் இது புதிய நுண்ணுயிரி என உறுதிப்படுத்தியுள்ளன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கு, பாக்டிரியா போன்ற கிருமிகள் ஜீரணிக்கமுடியாத காளான் கழிவுகளையும் இப்பூச்சிகள் தின்று ஜீரணித்துவிடும். மண்ணின் தரத்தை பல மடங்கு உயர்த்தக்கூடியவை. இந்த பூச்சிகளுக்கு கண்கள் கிடையாது. மேலும், இந்த பூச்சி விவசாயம் மற்றும் மறுத்து துறையில் எந்தெந்த விதத்தில் எல்லாம் பயன்படும் என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…