தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் குமாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கவுதமனுக்கு லதா என்ற மனைவியும், சார் முகிலன் மற்றும் சார் சித்தார்த்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது ஒரு மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் ரத்தம் உறைந்து போகும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர் மருத்துவ செலவிற்காக பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் விருப்ப ஓய்வு கொடுத்து விடலாம் என்று நினைப்பதாகவும், அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அவரது மனைவியும் மகன்களும் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. எனவே நீங்களே விருப்ப ஓய்வு கொடுத்தால் முழுமையாக வரவேண்டிய பணம் வராது. அதனால் ஒரு வருடம் மட்டும் பணி செய்யும் படி கூறியுள்ளனர்.
இந்நிலையில் கௌதமன் பணியில் இருந்தபோது கடன் கொடுத்தவர் போன் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த அவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் கௌதமன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…