போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று, மாவட்ட ஆட்சியர்களும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு குறைவுதான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.
தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்து ஆக வேண்டும். போதைப் பொருள் தான் சாதி, மதம் மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள் விற்கப்படுகிறதா எனது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயன்பாடு என்பது தனிமனித பிரச்சனை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் விற்பதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில், போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…