சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 2016-21-ம் காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 அக்டோபர் மாதம் விஜயபாஸ்கர் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரொக்கப் பணம், தங்க நகைகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபர் 17-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில், அவரின் மனைவி ரம்யா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் 22-ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  விஜயபாஸ்கர், அவரின் மனைவி மீதான 216 பக்க குற்றப்பத்திரிகையை , லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, விஜயபாஸ்கரும், அவரின் மனைவி ரம்யாவும் இன்று மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றம் உத்தரவை அடுத்து, புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர், மற்றும் அவரின் மனைவி ரம்யா இன்று ஆஜரான நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 26ம் தேதி விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, 2013-21 வரை 8 ஆண்டுகளில் வருமானத்தை விட ரூ.35.79 கோடி கூடுதலாக சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

18 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

1 hour ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

1 hour ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

1 hour ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

3 hours ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

3 hours ago