சொத்து குவிப்பு வழக்கு – எஸ்பி வேலுமணி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதாவது, சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
என் மீதான வழக்கு அரசியல் காழ்புணர்ச்சிக்காக வேண்டுமென்று பதியப்பட்டுள்ளது. ரூ.50 கோடி சொத்து குவித்ததாக வழக்கில் கூறியிருக்கிறார்கள், ஆனால் அது குறித்த விவரம் இல்லை. சொத்து, கட்டடம், வீடு என சொத்தின் விவரம் வழக்கின் முதல் தகவல் அறிவிக்கையில் இல்லை என எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் எஸ்பி வேலுமணி. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது, தற்போது எஸ்பி வேலுமணி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.