சொத்து குவிப்பு வழக்கு – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்.. வழக்கு அக்.30க்கு ஒத்திவைப்பு!

vijayabaskar

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 2016-21-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 2021 அக்டோபர் 17-ம் தேதி விஜயபாஸ்கர், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 அக்டோபர் மாதம் விஜயபாஸ்கர் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரொக்கப் பணம், தங்க நகைகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டாக தெரிவிக்கப்பட்டது. இதில், அவரின் மனைவி ரம்யா பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் 22-ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  விஜயபாஸ்கர், அவரின் மனைவி மீதான 216 பக்க குற்றப்பத்திரிகையை, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விஜயபாஸ்கருக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்ட நிலையில், சமீபத்தில் ஆஜரானார். அதன்படி, செப்டம்பர் 26ம் தேதி விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில்,  சொத்து குவிப்பு வழக்கில் இன்று மீண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீமன்றத்தில் ஆஜரானார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை நகல் ஏற்கனவே தரப்பட்ட நிலையில், விடுபட்ட நகல்களை தர கோரியிருந்தார் விஜயபாஸ்கர்.

குற்றப்பத்திரிகை நகல் முழுமையாக வழங்கப்படவில்லை என விஜயபாஸ்கர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இத்தபின் வழக்கின் குற்றப்பத்திரிகையின் அனைத்து பக்கங்களையும் விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும்,  அரசு தரப்பு கால அவகாசம் கோரியதால், சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை புதுக்கோட்டை நீதிமன்றம் அக்டோபர் 30ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident