சொத்து குவிப்பு வழக்கு – தீபா மனு தள்ளுபடி

J Deepa

ஜெ.தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கோரி, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடக்கூடாது என்று தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர். குற்றம் நிரூபணமானதால் ஜெயலலிதாவின் சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க முடியாது என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், கர்நாடகாவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் நாரயணமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 வகையான பொருட்களை ஒப்படைக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடகா அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க, வைர நகைகளை தவிர மற்ற எதுவும் கர்நாடகா நீதிமன்றத்தில் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்களை ஒப்படைக்குமாறு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தது எனபது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்